கர்த்தர் விரும்பும் நாவு


🛑பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். 

🛑 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். 

🛑அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! 

🛑நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தையே கொளுத்திவிடுகிறதாயும் இருக்கிறது! 
யாக்கோபு 3:5-6

கர்த்தர் மனுஷர்களுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கிறார் அவற்றில் மிக முக்கியமானது நாவாகும் மனிதனின் அன்றாட செயல்களில் அவனை முன்னேற்றுவதும் தவறான பாதைகளின் பக்கம் அழைத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பது அவனுடைய நாவு தான்.அது சிறியதொரு சதைத் துண்டுதான், என்றாலும் அதனால் விளையும் விபரீதங்கள் தாம் எத்தனை! உருவாகும் பயன்கள் தாம் எத்தனை! அது சக்தி வாய்ந்த பொருள்.

நாவை கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம் கத்தியைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம் ஓர் உயிரை எடுக்கக் கொலையும் செய்யலாம். இதே போன்றுதான் நாவும். 
ஒருவர் வாயின் வார்த்தைகளும், சிந்தனைகளும் தொடர்புடையவைகளே.
நாவுக்கு எதையும் தானாகப் பேசும் ஆற்றல் இல்லை. மனத்தின் தூண்டுதலால்தான் நாவும் மற்ற பொறிகளும் இயங்குகின்றன. 


இயேசு தன்னுடைய வேத வசனங்களை கொண்டே அவருக்கு எதிராக வந்த வேதபாராகர்களையும்,சாத்தனையும் அனுகினார். அனைத்து வேத வசனங்களையும் சரியாக கற்பிக்கும் ஆசிரியராகவும், நேர்மறை சிந்தனை யாளராகவும் மனுக்குல வாழ்வை முடித்தார்.
அவர் பேசிய வார்த்தைகள் ஒரு புரட்சியை உண்டாக்கின. இன்று உலகத்தின் கிறிஸ்தவர்களின் எண்ணிக்குக்கு அது சாட்சி.
ஒரு நல்லாசிரியர் என்றுமே மாணவர்கள் மனதிலே நெடுங்காலம் நிலைத்திருப்பார். காரணம் அவர் பேசிய வார்த்தை நேர்மறை சிந்தனைகளையும் முன்னேற்ற வழிகளையும் கற்றுக்கொடுத்து இருக்கும். 
அனைத்தும் வாயின் வார்த்தைகளே.


இன்று நம்மை சுற்றி கிறிஸ்தவர்களே கிறிஸ்தவ சிந்தனையானர்களாக இருப்பார்களா என்று பார்த்தால் மிக கடினமே.
 உலகத்தில் நேர்மறை சிந்தனையாளர்கள் அதிகமுண்டு,அநேகர் புத்தகப் புழுக்களாகவும்,தன்னை சுற்றிலும் நேர்மறை சிந்தனை நண்பர்களையும் வைத்திருப்பர். அனைவரும் கிறிஸ்தவர்களும் அல்ல. ஆனால் இன்றுவரை பதிவிடப்பட்ட நேர்மறை சிந்தனை புத்தக பதிப்புகள் 90% வேத வசனங்களை பின்னனியாக கொண்டவை.
உங்கள் பிள்ளைகள் நாளை ஒரு சிறந்த நேர்மறை சிந்தனையாளராக வேத்தை கற்று கொடுத்தீர்களா? உங்கள் வாயின் வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? நீங்கள் முதலில் வேத வசனங்களை சரியாக ஆராய்நது கிறிஸ்தவ சிந்தனைகளை வளர்த்து கொண்டீர்களா?

என்ககு தெரிந்த நபர்களில்  சிலர் கிறிஸ்தவ ஊழியர்களை பற்றி அதிகம் பணம் சம்பாதிப்பவர்கள், அவர்கள் பிள்ளைகள் ஒழுக்கமில்ல்தவர்கள், ஊழியர்கள் ஊழியங்கள் என்றாலே குறை மட்டும்தான். கிறிஸ்தவ சிந்தனையற்ற இடங்களில் இருந்து உங்கள் மனதை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேவன் இதற்கான ஞானத்தை வேதத்திலே தந்திருக்கிறார்.
ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி குறை பேசும்  நபர்கள் ,பிரிவினை சிந்தனைகள், பாம்பின் விஷம்போல் வார்த்தைகள், நாவை சுழட்டி பேசுபவர்கள்(உள்ளதை இல்லதென்றும், இல்லாததை உள்ளதென்றும் பேசுபவர்கள்)... இப்படிப்பட்டவர்கள் நேரடியாக ஒரு பிரச்சனைகளை அனுக தெரியாத மற்றவர்களை புறமுதுகில் குத்தும் கோழை நாய்கள்.

எனக்கு தெரிந்த ஊழியர் 2010ல் ஒரு பத்து லட்சசத்தை ICICI mutual fund-ல் இன்வெஸ்ட்மென்ட் செய்தார். இன்று அதன் மதிப்பு 3 கோடி 18 லட்சம். அவருடைய ஊழியப்பாதைகளும் விஸ்தரித்து அநேகருக்கு வாழ்வளிப்பதாகவே உள்ளது. உடனே இவர் ஊழியம் செய்து இன்று பணக்காரணாகிவிட்டார் என்று சொன்னால் நம்புவீர்களா? இவரை குறைகூறுபவர்கள் அநேகர்.  என்னை பொறுத்தவரை தேவன் தந்த ஞானத்தை சரியாக பயன்படுத்துங்களென்றே சொல்வேன்.


கிறிஸ்தவ சிந்தனையற்ற, எதிர்மறை சிந்தனை கொண்ட மனிதர்களிடமிருந்து உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் விலக்கி பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம்.


ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்: நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
நீதிமொழிகள் 15:1,4

 

"பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்

கர்த்தர் நல்லவர்
ஆமேன்
அல்லேலுயா.

Comments

Popular posts from this blog

Promise Word

செப்பனியா 3:17

மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி