சோதனைக்கு எதிர்த்து நின்றல்!
Dr.உட்ரோ குரோல் (ஜனவரி-பிப்ரவரி 2018) ஒவ்வொரு நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் விலகிநிற்கும் வாய்ப்புகளால் நாம் அச்சுறுத்தப்படுகின்றோம். பாவம் செய்யவும் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கவும் அவருடைய வார்த்தையை அலட்சியம் பண்ணவும் இன்று அநேக சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இவைகளை நாம் சோதனைகள் என்கிறோம். அது தேர்வில் காப்பியடிப்பது, வாடிக்கையாளரை ஏமாற்றுவது, உண்மையைத் திரித்துக்கூறுவது போன்றவையாகவும் இருக்கலாம். இந்த சோதனைகள் நமது ஆவிக்குரிய வாழ்வை உருவாக்கவோ அழிக்கவோ முடியும். நாம் விரும்பியோ விரும்பாமலோ சோதனை நமது வாழ்வில் வரும். அதனை நாம் சமாளிக்கும் வேளையில் அதற்கு தப்பித்துக்கொள்ளும் வழியை தேவன் அளிப்பார். ஆனால் சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றிபெற வேண்டும். சோதனையில் விழுவதைப் போன்று நமது ஆவிக்குரிய வெற்றியை அழிப்பது வேறு எதுவும் இல்லை. அச்சோதனை பணம், இச்சை, அதிகாரம், பதவி, புகழ், அல்லது பாலியல் சார்ந்ததாக அமையலாம். இவற்றைப் போல நூற்றுக்கணக்கான சோதனைகள் உண்டு. வாய்ப்புகள் ஒரு முறைதான் வரும், ஆனால் சோதனைகளோ ஆயிரக்கணக்கில் நமது வாசலைத் தட்டிக்கொண்டேயிரு...