Posts

Showing posts from 2023

கர்த்தர் விரும்பும் நாவு

Image
🛑பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.  🛑 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.  🛑அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!  🛑நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தையே கொளுத்திவிடுகிறதாயும் இருக்கிறது!  யாக்கோபு 3:5-6 கர்த்தர் மனுஷர்களுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கிறார் அவற்றில் மிக முக்கியமானது நாவாகும் மனிதனின் அன்றாட செயல்களில் அவனை முன்னேற்றுவதும் தவறான பாதைகளின் பக்கம் அழைத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பது அவனுடைய நாவு தான்.அது சிறியதொரு சதைத் துண்டுதான், என்றாலும் அதனால் விளையும...

மனிதனின் இருதயம்.

Image
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. எரேமியா 17:9 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும்,காமவிகாரமும்,வன்கண்ணும், தூஷணமும்,பெருமையும்,மதிகேடும், புறப்பட்டுவரும்,பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும். மாற்கு 7:21,22,23 என் நினைவுக்கு வந்த அழகான பாடல் வரிகள் இது. என் நினைவுகளை  நீர் தூய்மையாக்கும் இதயத்தை நீர் சுத்திகரியும் கண்கள் கைகள் செயல்களெல்லாம் உம்மைப் பிரியப்படுத்தட்டும். பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும் பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7 மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது. ஆதியாகமம் 8:21 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் ...

விடுதலை!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32 வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும். துக்கத்திலிருந்து விடுதலை! “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92 தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும். ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது. இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்: “வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.” “வேத வசனங்களே என் மனமகி...

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு

Image
“நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7). ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்துவதற்கும் நேரம் கொடுத்தார். தீவட்டி எரிவதற்கு எண்ணெய் ஆயத்தப்படுத்துவதற்கும் நேரம் கொடுத்தார். இப்பொழுதோ மணவாளன் வருகிற நேரமாகிவிட்டது. மணவாளன் வந்தபிறகு ஆயத்தப்பட்டு கொண்டிருக்க நேரமில்லை. ஆயத்தமாயிருந்தவர்கள்தான் அவரோடேகூட கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது (மத். 25:10) என்று வேதம் சொல்லுகிறது. தேவ பிள்ளைகளே, உங்கள் எஜமான் இன்ன நாழிகையிலே வருவார் என்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் உடனடியாக ஆயத்தமாகிவிடுங்கள். அநேகர் இந்த நாளில், இந்த மாதத்தில், இந்த வருஷத்தில் இயேசு வருவார் என்று குறிப்பிட்டு சொல்லுகிறார்கள். உதாரணமாக 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி இயேசு வருவார் என்று கொரியாவிலுள்ள ஒரு போதகர்கூட உரைத்தார். ஆனால் யார் ...

தேவனிடத்தில் நாம் கொண்டிருக்கும் அன்பு ஒருக்காலும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும்

Image
கர்த்தரை தேடி அதிகமாக அவரைப்பற்றி அறிந்து கொள்ளுவதிலேயே மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கிறது.  *“உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது”* (உன்னதப்பாட்டு 4:10).  ஆம், கர்த்தருடைய நேசம் அது மிக இனிமையானது திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். – உன்னதப்பாட்டு 8:7 நாம் தேவனிடத்தில் கொண்டிருக்கும் அன்பினை ஒருக்காலும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். – ரோமர் 8:36-39

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

Image
“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது”  மத்தேயு 15:8 இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம். அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிற...

Each one Catch One

Image
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன், என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். - (அப்போஸ்தலர் 20:24) . ஒரு முப்பது வயது வாலிபன் அந்த வயது வரை உலக இன்பங்களை அனுபவித்து விட்டு ஒரு கொடிய வியாதி தாக்கியதால் மரணப்படுக்கையில் இருந்தான். அவனை ஒரு அருமையான் ஊழியர் கண்டு கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அவன் கண்ணீரோடு தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். அடுத்தநாள் அந்த ஊழியர் அவனை பார்க்க வந்தபோது அந்த வாலிபன் சோகமாகவும் துயரத்திலும் இருப்பதைக் கண்டார். அவனிடம் “ஏன் மகனே, நீ இரட்சிக்கப்பட்டதைக் குறித்து சந்தேகப்படுகிறாயா? நீ தேவனை சந்திக்க பயப்படுகிறாயா? ” என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன் உணர்ச்சி பெருக்கோடு,” இல்லை, நான் மரிப்பதற்கு பயப்படவில்லை. நான் இவ்வளவு நாட்கள் தேவனுக்காக ஒரு காரியம் கூட செய்யாமல் என் வாழ்நாளை வீணடித்துவிட்டேனே! வெறுங்கைய...

அன்பு

Image
 ...ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; .... (1 யோவான் 4:7) மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு ஆழமான உண்மையின் உச்சத்தை, பரிசுத்த வேத சத்தியத்தை நமக்கு விளக்குகிறது. அன்பு என்பதே சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து, கர்த்தர் இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்தே மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதாவது தேவனாகிய கர்த்தரே அன்பின் பிறப்பிடம். அன்பு மனிதனிடத்திலிருந்து உண்டானதல்ல. தேவனாகிய கர்த்தர் நம்மை நேசித்து நமக்கு வெளிப்படுத்திய அன்பை, நமக்குள் கொடுத்த அன்பை நாம் பெற்று அதை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களோடு அந்த அன்பை பகிர்ந்து கொள்கிறோம். அந்த அன்பினால் நாம் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால், அன்பு என்ற ஒரு வார்த்தையை இன்று உலகம் பயன்படுத்திக் கொள்கிற விதங்கள், அன்புக்கு உலகம் கொடுக்கிற விளக்கங்கள், உலகம் அன்பை வெளிப்படுத்துகிற விதங்கள் என இவற்றை எல்லாம் நாம் உற்று நோக்கும் போது, உண்மையிலேயே நாம் அன்பை குறித்து பரிசுத்த வேதத்தின் வழியாய் அறிந்து கொள்வதே ஏற்றதும், இறுதியானதாகவும் இருக்க முடியும் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பரிசுத்...

நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்

Image
சங்கீதம் 142:3 என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள். சங்கீதம் 142:4 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. நம்முடையடைய வாழ்க்கையில் இருக்கிற கஷ்டங்கள், போராட்டங்கள், தவிப்புகள், கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிறார் அவர் உன் பாதையை அறிந்து இருக்கிறார். என் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ, எனக்கு ஒரு நல்ல காலம் வராதோ, என்று கலங்கி பயப்பட வேண்டாம் அவர் நம் பாதையை அறிந்து இருக்கிறார், ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்துவார். 1. ஆத்துமாவை தேற்றி அவர் நீதியின் பாதையில் நடத்துகிறார்  சங்கீதம் 23:3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். கர்த்தர் நம் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார்.  நீதிமொழிகள் 12:28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. நாம் போகிற நீதியின் பாதைய...

சோதித்தறிதல்

Image
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்.  சங்கீதம் 11:5 நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, எரேமியா 20:12 சோதனை ஏன்? தேவனுடைய வல்லமையை அறிந்து கொள்ள…. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. உபாகமம் 8:2 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். உபாகமம் 8:3 தேவனை நீ நேசிக்கிறாயா என்பதை அறிந்து கொள்ள உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உ...

நியாயம் தீர்த்தல்

Image
நம் அயலவர்களைப் பற்றி குறை கூறுவதென்பது நம் அனைவருக்கும் மிகவும் விருப்பமான விடயமாகும் ஆனால் நம்மை இன்னொருவர் குறை கூறினால் அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அதுதான் மனித இயல்பு. மத்தேயு 7:1 "நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப்படாத படிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்". இது இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில் கற்பித்த மிக முக்கியமான ஒரு படிப்பினை. இன்று மனிதர்களின் உடையை வைத்து அவர்களின் குணங்களை சொல்ல முயலும் உலகத்திலே வாழ்கிறோம். அல்லது ஒருவரின் செயல்களை வைத்து அவர் எப்படிப் பட்டவர் என சொல்ல முயல்கிறோம் ஒரு நாள் ஒரு மகனும் தந்தையும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரயிலில் ஏறி உட்கார்ந்தனர், அவர்களுக்கு முன்பக்கத்திலே ஒரு இளம் காதலர்கள் உட்கார்ந்திருந்தனர். இந்த தந்தை தனது மகன் ஜோனுக்கு ஜன்னல் இருக்கையை கொடுத்து பக்கத்திலே அமர்ந்துக் கொண்டார். தனக்கு முன் இருக்கையில் இருந்தவர்களோடு ஜோனின் தந்தை பேச்சுகொடுத்தார். ரயில் புறப்பட தயாரானது ஆனால் ஜோனின் செயற்பாடுகள் ஆச்சரியமூட்டும் விதத்தில் இருந்தது என்றாலும் அந்த இளம் வயது காத...

Glory to God

Image
I heard the Spirit of the Lord say,  "The voice of the Almighty thunders, 'Arise, O warrior of faith! The time for breakthrough is at hand, and I will lead you into the battle with a mighty roar. Behold, I am the God of thunderous victory, and I shall shatter the enemy's stronghold on your territory. I will sweep away every obstacle that stands in your way by my right hand. Fear not, for I have equipped you with divine armor and bestowed upon you the authority to trample upon serpents and scorpions. With a fiery passion burning within your soul, you shall reclaim what has been stolen from you.  I declare unto you, that the enemy's reign of darkness is coming to an end. I am the God of breakthrough, and I will unleash my power upon the enemy's camp. As you march forward, the ground beneath you will quake, and the heavens shall tremble with anticipation. The forces of darkness will cower in fear as they witness the might of my hand moving on your behalf. ...

நியாயமும் நீதியும்

Image
2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான். நாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும்? எனக்கு ஞாபகத்தில் வருவதெல்லாம் நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும்,  நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்! ஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளன. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் பார்த்தால், நீதி நியாயம் என்று வாய்மொழியாகப் பேசித்திரியாமல்,  இவை இரண்டையும் அவர்கள் வாழ்ந்து காட்டினர். இதை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்! நீதி என்ற வார்த்தைக்கு,  எபிரேய மொழியில் ‘tzedek’ என்ற வார்த்தைக்கு, நேர்மை அல்லது உண்மை என்ற அர்த்தம் வரும். இதை மனதில் கொண்டு இன்றைய வேதாகமப் பகுதியைக் காண்போம். தாவீது விசேஷித்த பெலனும், விசேஷித்த பெருந்தன்மையையும்  கொண்டவனாய் இஸ்ரவேல் மக்களுக்கு முன் சாட்சியாக வாழ்ந்தது மட்ட...

யோபுவின் முரண்பாடு

Image
யோபு 38:1-18 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? (வ. 1-2) ஞானி ஒருவர் ஒருமுறை, “மனப்போராட்டம் என்பது மேலோட்டமானது அல்ல, அடிவேரில் தான் அது அதிகமிருக்கும்” என்றார். யோபுவும் கூட இதனை ஆமோதிப்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மனமடிவுண்டாக்கும் அழிவின் செய்திகளை பகுதிப்பகுதியாக கேட்டு அனுபவிக்கும் சூழலுக்கு அவர் தீடிரென்றும் கட்டாயமாகவும் தள்ளப்பட்டார். அவருடைய மிருகஜீவன்கள், வயல்வெளிகள், வேலையாட்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது. இந்த கொந்தளிப்புக்கு மத்தியில், அவரது மனைவி தேவனை நிந்தித்து ஜீவனை விடும்படி வற்புறுத்தினாள். யோபு ஞானமாக இந்த யோசனையை புறக்கணித்தார், ஆனாலும் தேவனோடு தன் நியாயத்தை வழக்காட விரும்பினார் (யோபு 13:3,15). இறுதியாக தேவன் அவருக்கு பதிலளிக்கையில், தேவனும் தனது சொந்த கேள்விகளினால் வழக்காடினார் (38:1-2). தனது கேள்விகளுக்கான பதிலகளை தேடின யோபு, தேவனின் சர்வவல்ல இறையாண்மையை கண்டார் (வ.4). தேவனின் வழிகள் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டவை எ...

Dealing with death the right way

“ Though I walk through the valley of the shadow of death, I will fear no evil; for You are with me.” Ps 23:4 NKJV   Here is the truth about death:  (1) It’s a sure thing. The story is told of a hypochondriac who put these words on his tombstone: “Now maybe you’ll believe I was sick.” Seriously, if you’re wise, you won’t obsess about death, but you will prepare for it.  (2) It’s a sojourn. The word “walk” means each step you take brings your departure date one day closer. The word “through” tells you it’s only a temporary passage and not your final destination. The word metamorphosis pictures a humble caterpillar being transformed into a beautiful butterfly that can soar. Likewise, the Bible describes your new body in these words: (a) “Incorruptible,” meaning you will never again contend with pain or sickness (See 1Co 15:53).  (b) “Immortal,” meaning you will be ageless and incapable of dying (See v. 53).  (c) “Shadow.” Now, a shadow might frighten you, but it c...

சீஷன் யார்?

சீஷன்‌ வேதாகம உபதேசத்தில்‌ நிலைத்திருக்கிறான்‌ யோவான் 8 : 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சீஷன்‌ சுயவெறுப்பின்‌ பாதையைத்‌ தெரிந்துகொண்டு ஆண்டவரைப்‌ பின்பற்றுகிறான்‌: லூக்கா 9: 23 பின்பு அவர்‌ எல்லாரையும்‌ நோக்கி: ஒருவன்‌ என்‌ பின்னே வர விரும்பினால்‌ தன்னைத்‌ தான்‌ வெறுத்து, தன்‌ சிலுவையை அனுதினமும்‌ எடுத்துக்கொண்டு, என்னைப்‌ பின்பற்றக்கடவன்‌. சீஷன் அவரிடத்தில் கற்றுக்கொள்கிறான் மத்தேயு 11 : 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். சீஷர்கள் ஒருவரில் ஒருவர் அன்பு கூறுகிறார்கள் யோவான் 13 : 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்...

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே நீதி.23:23

Image
சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே. சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படு...

நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும்.

நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது, முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? (1 பேதுரு 4:17). கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு,    அவருடைய வீடாகிய சபையின் ஜனங்களிடத்தில் முந்தி துவங்கும். ஏனெனில்,    எவனிடத்தில் கர்த்தர் அதிகம் கொடுக்கிறாரோ அவனிடத்தில் அதிகம் கேட்கிறவர்,    எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறாரோ அவனிடத்தில் அதிகக் கணக்கைக் கேட்கிறவர்.  சபை கர்த்தருடைய ஆதீனத்தில் விஷேசித்தது,    அவருடைய இரத்தத்தைக் கிரயமாய் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டது. சபை என்பது வெறும் கட்டிடமல்ல,    கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவயமாகக் காணப்படுகிற ஜனங்களைக் குறிக்கிறது. ஆதாமிற்கு மணவாட்டியை உருவாக்கும் படிக்கு அயர்ந்த நித்திரையைக் கொடுத்து,    அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினது போல,    கல்வாரி சிலுவையில் இயேசு தன் ஜீவனை...

Names of God and their meanings

Image
Praise the Lord..

தேவனிடம் நெருங்குங்கள்..

Image
யோபு போல், துன்பத்தின் போது தேவன் தங்களைக் கைவிட்டதாக சிலர் நினைக்கலாம். எந்தவொரு துன்பத்தையும் தடுக்கும் அல்லது அகற்றும் வல்லமை தேவனுக்கு உண்டு என்பதை நாம் அறிந்திருப்பதால், அவர் அதைச் செய்யவில்லை என்றால், ஒருவேளை, “தேவன் நான் ஜெபிக்கும் உதவியை வழங்கவில்லை என்றால், நான் எப்படி அவர் மீது விசுவாசம் வைப்பது?” என்ற கேள்வி எழலாம்.  அவனுடைய கடுமையான சோதனைகளின் ஒரு கட்டத்தில், நீதியுள்ள யோபு கூறினான்: “தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார். “இதோ, ‘கொடுமை என்று கூப்பிடுகிறேன்!’ கேட்பார் ஒருவரும் இல்லை, கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.” யோபுவுக்கு அவர் அளித்த பதிலில்,  “நீயே என் நியாயத்தை அவமாக்குவாயோ, நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ் சுமத்துவாயோ?” என்று தேவன் கோருகிறார். அல்லது வேறு வார்த்தைகளில் எனில், “நீ என்னை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ் சுமத்துவாயோ?” கர்த்தர் தனது சர்வ வல்லமை மற்றும் சர்வ அறிவாற்றலை யோபுவுக்கு வலுக்கட்டாயமாக நினைவூட்டுகிறார், மேலும் தேவனின் அறிவு, ஆற்றல் மற்றும் ...

இயேசுவின் கண்ணீர்

Image
லூக்கா 19 : 41 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,” இயேசு எருசலேவுக்கு சமீபமாக வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டார். எருசலேம் இஸ்ரவேல் தேசத்தின் தலைநகராய் விளங்கியது. எத்தனையோ ராஜாக்கள் அரசாண்டும், அநேக ஆசாரியர் களதான் மேசியா என்று அறியவில்லை. ஜனக்கூட்டத்தார் மேசியா இஸ்ரவேல் தேசத்தை மீட்டுக்கொண்டு தேசங்களை அரசாளுவார் என்று நம்பினார் கள். இயேசுதான் அந்த மேசியா என்பதை நம்ப மறுத்து விட்டனர். ஜனங் களும் அவர்களுடைய தலைவர்களும் தங்களுக்கு உலகப்பிரகாரமான இராஜ்ஜியத்தை ஆளும் அரசியல்ரீதியான மேசியாவைப் பார்க்கிறார்கள் என்பதை இயேசு உணர்ந்தார். எனவே இயேசு தன்னைத் தேவனால் வாக்கு த்தத்தம் செய்யப்பட்ட மேசியா என்பதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணி த்து விடுவர் என்பதையும் உணர்ந்தார். அதற்காக எருசலேம் நகர மக்கள் அனுபவிக்கப் போகும் பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நினைத்து இயேசு கண்ணீர் விட்டார். ஜனங்கள் மனந்திரும்ப மறுத்ததற்காகவும், இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாததற்காகவும், மனங்கலங்கி கண்ணீர் விட் டார். 40ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போவதை அறிந்து கண்ணீர் விட...

தேவனுடன் தனிமையில் நேரத்தை செலவிடுவது ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

Image
எல்லா உறவுகளும் நேரம் எடுக்கும். தேவனுடனான உறவு என்பது, பல வழிகளில் மற்ற உறவுகளைப் போலல்லாமல், இன்னும் மற்ற உறவுகளைப் போலவே சில விதிகளைப் பின்பற்றுகிறது. தேவனுடனான நமது உறவைக் கருத்திற்கொள்ள உதவும் ஒப்பீடுகளால் வேதாகமம் நிரம்பியுள்ளது. உதாரணமாக, கிறிஸ்து மணவாளனாக சித்தரிக்கப்படுகிறார், திருச்சபை மணவாட்டியாக சித்தரிக்கப்படுகிறது. திருமணம் என்பது இருவர் வாழ்வில் ஒன்றாக இணைவது ஆகும் (ஆதியாகமம் 2:24). அத்தகைய நெருக்கத்தை ஒருவருக்கொருவர் தனிமையில் ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை உள்ளடக்கியது. மற்றொரு உறவு தகப்பன் மற்றும் பிள்ளை. நெருங்கிய பெற்றோரின் உறவுகள் என்பது குழந்தைகளும் பெற்றோரும் விசேஷித்த நிலையில் "தனியான நேரத்தை" ஒன்றாகக் கொண்டிருப்பதாகும். நேசிப்பவருடன் தனியாக நேரத்தை செலவிடுவது அந்த நபரை உண்மையாக மேலும் கூடுதலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. தேவனுடன் தனிமையில் நேரத்தை செலவிடுவதும் அந்த வகையில் வேறுபட்டதல்ல. நாம் தேவனுடன் தனிமையில் இருக்கும்போது, அவருடன் நெருங்கி வருகிறோம், குழு அமைப்புகளில் நாம் அறிந்துகொள்வதை விட வித்தியாசமான முறையில் அவரைப் பற்றி அதி...

ஆசீர்வாதத்தின் வாசலை நாமே அடைக்கிறோம்!

Image
  தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். யாக்கோபு 4-7   இன்றைக்கு கீழ்ப்படியாமையினாலே அநேக குடும்பங்கள் ஊழியக்காரர்கள் மற்றும் அநேக சபைகள் தங்கள் அதிகாரத்தை இழந்து போய் நின்று கொண்டிருக்கின்றன. பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியில்லாமல் தேவ பலனை இழந்து போய் நிற்கும் ஊழியக்காரர்கள் பலர் உண்டு. வைராக்கியமாக பிரசங்கிப்பார்கள், ஜெபிப்பார்கள், அருமையாக ஆராதிப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு வகையில் பிசாசின் கிரியைகளின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எதாவது ஒரு வழியில் பிசாசு அவர்களை அடிமையாக்கி அவனது ஆளுகையில் வைத்திருக்கிறான்.   இயேசு கிறிஸ்துவை பார்த்து பிசாசுகள் பயந்து கெஞ்சின. எங்களை விட்டுவிடும் எங்களைத் போக விடும். காலம் வருவதற்கு முன்பாக எங்களை வேதனைப்படுத்த வந்தீரோ என்றன. ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்கு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.பிசாசினால் அவரை குற்றப்படுத்த முடியவில்லை.சாத்தான் தன்னை சோதனைக்குட்படுத்தும் போது அவனை துரத்தினார்.அவர் தன் சீஷர்களை குறித்து வேண்டுதல் செய்யும் போது என்னை போல இவர்களும் உலகத்தார்களல...