நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்

சங்கீதம் 142:3

என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.


சங்கீதம் 142:4

வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.


நம்முடையடைய வாழ்க்கையில் இருக்கிற கஷ்டங்கள், போராட்டங்கள், தவிப்புகள், கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிறார் அவர் உன் பாதையை அறிந்து இருக்கிறார். என் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ, எனக்கு ஒரு நல்ல காலம் வராதோ, என்று கலங்கி பயப்பட வேண்டாம் அவர் நம் பாதையை அறிந்து இருக்கிறார், ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்துவார்.

1. ஆத்துமாவை தேற்றி அவர் நீதியின் பாதையில் நடத்துகிறார் 


சங்கீதம் 23:3

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.


கர்த்தர் நம் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார். 


நீதிமொழிகள் 12:28

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.


நாம் போகிற நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணம் இல்லை.  அந்த ஜீவ பாதை நம்மை ஒரு நாளும் கைவிடாது 


2. நாம் பாதைகளில் கிருபைகள் தந்து வழிநடத்துகிறார் 


சங்கீதம் 25:10

கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.


கர்த்தர் நம் வாழ்க்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றி அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்வார். நாம் கடந்து செல்கிற பாதையை அவர் அறிந்து இருக்கிறபடியாலே அவர் தன் கிருபையை அந்த பாதையில் வைக்கிறார். 


3. பரிசுத்தவான்களின் பாதைகளை அவர் காப்பாற்றுகிறார் 


 நீதிமொழிகள் 2:8

அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.


நம் ஆண்டவர் நீதிமான்களை காப்பாற்றுகிறார். பரிசுத்தவான்களின் பாதைகளை அவர் காப்பாற்றுகிறார். நம்மை இல்லாமல் போகும்படி எவ்வளவு கன்னிகள் வைத்தாலும் ஆண்டவர் நம்மை காப்பாற்றுகிறார். ஏனென்றால் அவர் நம் பாதைகளை அறிந்து இருக்கிறார்.

4. மலைகளை வழியாய் மாற்றி உங்கள் பாதையை உயர்த்துகிறார் 


ஏசாயா 49:11

என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.


என் வாழ்க்கை பாதை எந்த மாற்றமும் இல்லாமால் இப்படியே இருக்கிறதே என்று கலங்குகாதே. கர்த்தர் ஒரு தகப்பனாக, தாயாக, உற்ற தோழனாக எப்போதும் நம்மோடு இருக்கிறார். அவர் நம் பாதைகளில் ஒரு உயர்வை கட்டளையிடுவார். மலை போல இருக்கிற நம் எல்லா போராட்டத்தையும் கர்த்தர் வழியாய் மாற்றி நம்மை உயர்த்துவார். எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை மனரம்மியமாய் ஏற்று கொண்டு இருக்கிற நம்மை கர்த்தர் நிச்சயமாக உயர்த்துவார். 


5.  நம் பாதைகளை அவர் பிரகாசிக்க பண்ணுகிறார் 


யோபு 22:28

நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்


பிசாசின் தந்திரங்கள் நம்மை இருளில் தள்ள நினைத்தாலும் நம் பாதையில் இருள் இல்லை நம் பாதை முழுவதும் கர்த்தர் நித்திய வெளிச்சமாய் இருந்து வருகிற நாட்களில் நம்மை நடத்துவார். கர்த்தர் நம் இருளை பிரகாசிக்க பண்ணுவார். 


ஆமென். அல்லேலுயா.

Comments

Popular posts from this blog

Promise Word

செப்பனியா 3:17

மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி