Posts

மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி

Image
“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து,  உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை   அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?” – மீகா 6:8 இப்போது, ​​மனத்தாழ்மை என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒரு தலைப்பு அல்ல என்பதை நாம் அறிவோம். மாறாக, விடுதலை, மீட்பு அல்லது குணம்பெறுதலை பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எனக்குப் புரிகிறது. இது நாம் தவிர்க்க விரும்பும் ஒரு தலைப்பு, ஏனென்றால், நம்முடைய சொந்த தாழ்மையின்மை நமக்கு குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கலாம். நாம் அனைவரும் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதிக தாழ்மையுள்ளவர்களாக மாறுவது அவ்வளவு உற்சாகமாகம் அளிப்பதாக இல்லை. நாம் மனத்தாழ்மையை குறித்து ஆராய துவங்குவதற்கு முன், முதலில் உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். வேதாகமம் நம்மைத் தாழ்மையாக இருக்கச் சொல்கிறது என்பதைத் தவிர, மனத்தாழ்மையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பல நல்ல காரணங்களையும் வழங்குகிறது. மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழியாகும் மற்றும் நம்பமுடியாத ...

Promise Word

Image
தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32 #dailypromiseword #wordofhope #wordoftheday #bibleverses #jesus #theonlyhope #biblemanna #wordofchrist #promisesofgod #godspromise #promiseoftheday #promiseword #promiseverse #dailybibleverse #dailypost #dailydevotional #dailyverse #bibleverses #bible #bibleverseoftheday #bibleversedaily #tamil

செப்பனியா 3:17

Image
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். செப்பனியா 3:17 #dailypromiseword #wordofhope #wordoftheday #bibleverses #jesus #theonlyhope #biblemanna #wordofchrist #promisesofgod #godspromise #promiseoftheday #promiseword #promiseverse #dailybibleverse #dailypost #dailydevotional #dailyverse #bibleverses #bible #bibleverseoftheday #bibleversedaily #tamil

நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்

Image
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். சங்கீதம் 119:72 #tamilbibleverse

Bible Treasure

Image
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு 6:21

தெய்வீக சுகம்

Image
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5:16 பலருடைய குடும்பங்களில் காணப்படும் நோய்களும் பெலவீனங்களும், எவ்வளவு அதிகமாக ஜெபித்தும்குணமடையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய குறைகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு சரி செய்யாமல்இருப்பதே ஆகும். இன்றைக்கு அனேகர் பிறருக்கு விரோதமாக செய்த குற்றங்களுக்காக ஆண்டவரிடம் மன்னிப்புகேட்கிறார்கள் ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்பதில்லை. தெய்வீக சுகத்துக்காக பல வருடங்களாக ஜெபித்தும் அந்த ஜெபம் கேட்கபடாமல் இருப்பதற்கு உள்ள தடை என்னதெரியுமா நமக்கு பிறரிடம் உள்ள குறையை சரி செய்யாமல் இருப்பதே ஆகும். எனவே பிரியமானவர்களே இனியும்தாமதிக்காமல் பிறரிடம் குறைகள் இருக்குமானால் அதை உடனடியாக சரி பண்ணி ஒப்புரவாகுங்கள், அப்பொழுதுதெய்வீக விடுதலையை அதாவது பரிபூரணமான சுகத்தைப் பெற்று கொள்வீர்கள். ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், ம...

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

Image
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா.5:24). “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” என்கிற பவுல், ஆவியின் கனியைக் குறித்து பேசுகிறார். நாம் ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களானால் நம்மில் இந்த ஆவியின் கனி காணப்பட வேண்டும். நம்மில் உள்ள கனியைக் கண்டு நாம் எப்படிப்பட்டவர்கள் என்று பிறர் அறிந்துகொள்வார்கள். நாம் யார் என்று சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. ஆவியின் கனியின் எல்லா பகுதிகளுமே முக்கியமானவை. அவற்றை நாம் தனித்தனியே பிரிக்கமுடியாது. சிலர் என்னில் ஆவியின் இரண்டு கனி உண்டு, நான்கு கனியுண்டு என்பர். அப்படியல்ல; அதின் ஒன்பது பகுதிகளுமே நம்மில் முழுமையாகக் காணப்படவேண்டியது அவசியம். கர்த்தருக்கு பிரியாமனவர்களே, நமது வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? ஆவியின் வரங்களுக்கா? ஆவியின் கனிக்கா? நாம் தேவனுடைய பிள்ளைகளானால், நம்மில் ஆவியின் கனி காணப்படவேண்டியது அவசியம். ஆவியின் வரங்களோ தேவைக்கேற்றபடி அவனவனுக்கு ஆவியானவரால் அருளப்படுவது. அதேசமயம் ஆவியின் கனியை நம்மால் நம்மில் உருவாக்க முடியாது. அது...