மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி
“நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?” – மீகா 6:8 இப்போது, மனத்தாழ்மை என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒரு தலைப்பு அல்ல என்பதை நாம் அறிவோம். மாறாக, விடுதலை, மீட்பு அல்லது குணம்பெறுதலை பற்றிப் படிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் அல்லவா? எனக்குப் புரிகிறது. இது நாம் தவிர்க்க விரும்பும் ஒரு தலைப்பு, ஏனென்றால், நம்முடைய சொந்த தாழ்மையின்மை நமக்கு குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக இருக்கலாம். நாம் அனைவரும் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம், ஆனால் அதிக தாழ்மையுள்ளவர்களாக மாறுவது அவ்வளவு உற்சாகமாகம் அளிப்பதாக இல்லை. நாம் மனத்தாழ்மையை குறித்து ஆராய துவங்குவதற்கு முன், முதலில் உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். வேதாகமம் நம்மைத் தாழ்மையாக இருக்கச் சொல்கிறது என்பதைத் தவிர, மனத்தாழ்மையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பல நல்ல காரணங்களையும் வழங்குகிறது. மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழியாகும் மற்றும் நம்பமுடியாத ...