Posts

Showing posts from 2024

தெய்வீக சுகம்

Image
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5:16 பலருடைய குடும்பங்களில் காணப்படும் நோய்களும் பெலவீனங்களும், எவ்வளவு அதிகமாக ஜெபித்தும்குணமடையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய குறைகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு சரி செய்யாமல்இருப்பதே ஆகும். இன்றைக்கு அனேகர் பிறருக்கு விரோதமாக செய்த குற்றங்களுக்காக ஆண்டவரிடம் மன்னிப்புகேட்கிறார்கள் ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்பதில்லை. தெய்வீக சுகத்துக்காக பல வருடங்களாக ஜெபித்தும் அந்த ஜெபம் கேட்கபடாமல் இருப்பதற்கு உள்ள தடை என்னதெரியுமா நமக்கு பிறரிடம் உள்ள குறையை சரி செய்யாமல் இருப்பதே ஆகும். எனவே பிரியமானவர்களே இனியும்தாமதிக்காமல் பிறரிடம் குறைகள் இருக்குமானால் அதை உடனடியாக சரி பண்ணி ஒப்புரவாகுங்கள், அப்பொழுதுதெய்வீக விடுதலையை அதாவது பரிபூரணமான சுகத்தைப் பெற்று கொள்வீர்கள். ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், ம...

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

Image
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா.5:24). “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” என்கிற பவுல், ஆவியின் கனியைக் குறித்து பேசுகிறார். நாம் ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களானால் நம்மில் இந்த ஆவியின் கனி காணப்பட வேண்டும். நம்மில் உள்ள கனியைக் கண்டு நாம் எப்படிப்பட்டவர்கள் என்று பிறர் அறிந்துகொள்வார்கள். நாம் யார் என்று சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. ஆவியின் கனியின் எல்லா பகுதிகளுமே முக்கியமானவை. அவற்றை நாம் தனித்தனியே பிரிக்கமுடியாது. சிலர் என்னில் ஆவியின் இரண்டு கனி உண்டு, நான்கு கனியுண்டு என்பர். அப்படியல்ல; அதின் ஒன்பது பகுதிகளுமே நம்மில் முழுமையாகக் காணப்படவேண்டியது அவசியம். கர்த்தருக்கு பிரியாமனவர்களே, நமது வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? ஆவியின் வரங்களுக்கா? ஆவியின் கனிக்கா? நாம் தேவனுடைய பிள்ளைகளானால், நம்மில் ஆவியின் கனி காணப்படவேண்டியது அவசியம். ஆவியின் வரங்களோ தேவைக்கேற்றபடி அவனவனுக்கு ஆவியானவரால் அருளப்படுவது. அதேசமயம் ஆவியின் கனியை நம்மால் நம்மில் உருவாக்க முடியாது. அது...

ஆவியின் வரங்கள் & ஆவியின் கனிகள்

  II இராஜாக்கள் 2:9 அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. [A] "ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில் χαρίσματα (Charismata =  gift ) என்று அழைக்கப்படுகின்றது. 1 கொரி 12:4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. [B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρεά ( dōrea =bestowal, bestowment, donation)  என்று சொல்லப்படுகின்றது. (அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவ...

ஞானத்தைக் காட்டிலும் பெரியது

Image
“அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (2 சாமுவேல் 17 வசனம் 14). தாவீதைக் கொல்வதற்கான அகித்தோப்பேலின் ஆலோசனை சிறந்ததுதான் என்பதை அப்சலோம் அறிந்திருந்தான். ஆயினும் தன்னைச் சேவிக்கும்படி வந்திருக்கிற ஊசாயின் ஆலோசனையையும் கேட்போம் என்னும் அப்சலோமின் முடிவு அகித்தோப்பேலின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றிப்போட்டது. ஊசாய் அப்சலோமின் பெருமைக்கு தீனிபோடும் விதமாக, படையை அகித்தோப்பேல் அல்ல, நீர்தான் நடத்த வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தான். பெருமை கொண்ட எவரும் வெற்றியையும் அதனால் வரும் புகழையும் வேண்டாமென்று எளிதாகத் தள்ளிவிட மாட்டார்கள். அழிவுக்கு முன்னதாக வரும் பெருமை என்னும் ஆற்றில் அப்சலோம் விழுந்தான். முடிவில் அது அவனை மரணத்துக்கு நேராக இழுத்துச் சென்றது. அகித்தோப்பேலின் ஆலோசனையைக் கேட்ட பிறகு அப்சலோம் ஊசாயின் ஆலோசனையை ஏன் கேட்க வேண்டும்? இங்கேதான் தாவீதின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக கர்த்தரின் கரம் செயல்படுகிறதைக் காண்கிறோம். தாவீதும் அவனுடைய மனிதரும் சோர்ந்துபோயிருக்கிறார்கள், எனவ...

கர்த்தருடைய வழி

Image
  “கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?” (எரேமியா 23:18). இப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாயிருக்கவேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழுகிறோம். கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம்தான் இருக்கிறது. நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமேதான் கதாநாயகர்களாகிவிட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை. நான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர்...

பரலோக மிகுதி

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. 1 தீமோத்தேயு 1:14 தீமோத்தேயுவுக்கு எழுதிய தனது முதல் கடிதத்தில், பவுல் இயேசுவுக்கு முன்பாக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தான் “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன் என்றும் தன்னை “பிரதான பாவி” என்றும் விவரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:13,16). பவுலின் உடைந்த நிலையில், தேவன் கிருபையையும், விசுவாசத்தையும், அன்பையும் தாராளமாக ஊற்றினார் (வச. 14). அவருடைய வாழ்வில் உள்ள அனைத்து மிகுதிகளையும் விவரித்த பிறகு, பவுல் அப்போஸ்தலரால் தேவனுக்கு துதி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. தேவனுக்கே “கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” என்று அறிவிக்கிறார் (வச. 17). பவுலைப் போலவே, பாவத்திலிருந்து மீட்பதற்கான இயேசுவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது, நாம் அனைவரும் ஏராளமான கிருபையைப் பெற்றோம் (வச. 15). விளைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பற்றி சிந்திக்க நாம் இடைநிறுத்தும்போது, அபரிவிதமாய் நம்மை ஆசீர்வதிக்கும் நமது தேவனுக்கு நன்றியுள்ள துதியில் பவுலுடன் இணைவதைக்...

கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்

Image
  மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.   1 சாமுவேல் 16:7 இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவனால் அனுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார் (1 சாமுவேல் 16:1). ஈசாயின் மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, அவனே தெரிந்துகொள்ளப்பட்டவன் என்று சாமுவேல் நினைத்தார். ஆனால் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த (வச. 11), ஈசாயின் எட்டு மகன்களில், இளையவரான தாவீதை அடுத்த ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார். நாம் எந்த பள்ளியில் படித்தோம், என்ன சம்பாதிக்கிறோம் அல்லது எவ்வளவு தன்னார்வத் தொண்டு செய்கிறோம் என்பதை விட, தேவன் நம் மீது கரிசணையுள்ளவராயிருக்கிறார். சுயநலம் மற்றும் தீய எண்ணங்களிலிருந்து தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். ...

சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்

Image
 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர்... அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்... அவர் என்னை அனுப்பினார். ஏசாயா 61:1,3 ஏசாயா தீர்க்கதரிசி எருசலேம் தரைமட்டமாக்கப்படப்போகிறது என்னும் அதின் அழிவைக் குறித்து மிகுந்த துக்கத்துடன் எழுதுகிறார். அதேபோல், நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை சாம்பலாகிவிட்டதாக சில சமயங்களில் உணர்கிறோம். உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் எங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்கிறோம். ஆனால் ஏசாயா நம்பிக்கை அளிக்கிறார்: “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலை” அளிக்கவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார் (ஏசாயா 61:1-2). தேவன் நம் சோகத்தை மகிமையாக மாற்றுகிறார்: அவர்  “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை” கொடுக்கிறார் (வச. 3). “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்” (வச. 4) என்று வாக்களிக்கிறார்.  *உங்கள் விரக்தியில், உங்கள் சாம்பலில் தேவன் சிங்காரத்தை கண்டுபிடித்துக்கொடுக்கிறார். அது நீங்களே!* ஆமென்  அல்லேலூயா...

மன்னிப்பு

 * மன்னிப்பின்மையிலிருந்து உங்கள் இருதயத்தை விடுவியுங்கள், தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்* *”ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." கொலோசெயர் 3:16* யாராவது உங்களை புண்படுத்தும் அளவுக்கு நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். ஆம், ஜனங்கள் எப்போதும் உங்களை எரிச்சலூட்டலாம். உங்களைப் புண்படுத்தும் செயல்களை நீங்கள் செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், ஆனால் உங்களோடு பேசுவதையோ அல்லது உங்களை நேசிப்பதையோ அவர்கள் நிறுத்தவில்லை. மன்னிப்பு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையானது. நம் மீட்பின் அடிப்படை தேவன் நம்மை மன்னிப்பதாகும். ஆம், ஜனங்கள் எரிச்சலூட்டலாம், காயம் ஆழமாக இருக்கலாம், ஆனால் எப்படியும் மன்னிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இது மிகவும் உண்மை, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு புண்படுத்தப்பட்டாலும், தேவனுக்கு முன்பாக நாம் செய்த குற்றம் அதிகமாக உள்ளது, ஆனால் அவர் நம்மை மன்னித்தார். மத்தேயு 18:21-35 ல், கர்த்தராகிய இயேசு மன்னிப்பைத் தடுத்து நிறுத்துவதை ஒருசுவர் சிறையில் அ...

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்

 என் வாய் ஞானத்தைப் பேசும். என் இருதயம் உணர்வைத் தியானிக்கும் (சங்கீதம் 49:3). உணர்ச்சிவசப்படுதல் வேறு;  உணர்வடைதல் வேறு.  உணர்ச்சிவசப்படும் போது நாம் முதலில் தன்னிலை இழந்துவிட நேரிடும்; பின்னர், நமது கட்டுப் பாட்டையும் மீற தேவையற்ற வார்த்தைகள் வெளிவரும்; அடுத்தவர் வேதனைப் படுவார் என்ற உணர்வே இல்லாமல் போகும்; இறுதியில் நாமேதான் மன அமைதியை இழந்துவிடுகிறோம். முன்யோசனையின்றி உணர்ச்சி வசப்பட்டு காரியங்களைச் செய்யும்போது, அவைகளைச் செய்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, அடுத்தவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணர்வு அடங்கி அமர்ந்திருக்கும்போது, நான் என்ன செய்தேன், அதன் விளைவு என்ன வென்பதைச் சிந்தித்தால், சரி செய்யமுடியாத பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொள்வதுடன், நம்மைக் குறித்து நாமே வெட்கப்படவும் நேரிடும். ஆனால், உணர்வடைவது என்பது வித்தியாசமானது. உணர்ச்சிவசப்படுகிறவன் உணர்வடைவானாகில், தன்னுடைய தவறுகள் திருத்தப்பட வாய்ப்புகள் உண்டாயிருப்பதை அவன் உணருவான். தன்னிலை உணரப்படும்; உறவுகளும் புதுப்பிக்கப்படும். சவுல் ஒரு கெபியில் இருப்பதைக் கண்ட தாவீதின் மனுஷர், உணர்ச்சி வசப்பட்டு, ...