தெய்வீக சுகம்
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16
பலருடைய குடும்பங்களில் காணப்படும் நோய்களும் பெலவீனங்களும், எவ்வளவு அதிகமாக ஜெபித்தும்குணமடையாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய குறைகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு சரி செய்யாமல்இருப்பதே ஆகும். இன்றைக்கு அனேகர் பிறருக்கு விரோதமாக செய்த குற்றங்களுக்காக ஆண்டவரிடம் மன்னிப்புகேட்கிறார்கள் ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்பதில்லை.
தெய்வீக சுகத்துக்காக பல வருடங்களாக ஜெபித்தும் அந்த ஜெபம் கேட்கபடாமல் இருப்பதற்கு உள்ள தடை என்னதெரியுமா நமக்கு பிறரிடம் உள்ள குறையை சரி செய்யாமல் இருப்பதே ஆகும். எனவே பிரியமானவர்களே இனியும்தாமதிக்காமல் பிறரிடம் குறைகள் இருக்குமானால் அதை உடனடியாக சரி பண்ணி ஒப்புரவாகுங்கள், அப்பொழுதுதெய்வீக விடுதலையை அதாவது பரிபூரணமான சுகத்தைப் பெற்று கொள்வீர்கள்.
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
_ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்._ கொலோ 3:12,13 -
ஆமென்
அல்லேலூயா

Comments
Post a Comment