மனிதனின் இருதயம்.
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.
எரேமியா 17:9
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும்,காமவிகாரமும்,வன்கண்ணும், தூஷணமும்,பெருமையும்,மதிகேடும், புறப்பட்டுவரும்,பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மாற்கு 7:21,22,23
என் நினைவுக்கு வந்த அழகான பாடல் வரிகள் இது.
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்களெல்லாம்
உம்மைப் பிரியப்படுத்தட்டும்.
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்.
மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.
1 சாமுவேல் 16:7
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.
ஆதியாகமம் 8:21
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்
ரோமர் 8:27
வெள்ளியைக் குகையும் பொன்னைப் புடமும் சோதிக்கும். இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
நீதி 17:3
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்கு செம்மையாகத் தோன்றும். கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
நீதிமொழிகள் 21:2
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 94:11
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
எபேசியர் 5:15,16,21
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அது உள்ளத்தில் உள்ளவைகளை எல்லாம் ஆராயந்து பார்க்கும். நீதி 20:27
மத் 5:8 யில் இப்படியாக வாசிக்கிறோம், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:7
கர்த்தர் நல்லவர்.
ஆமென்
அல்லேலுயா..
Comments
Post a Comment