சீஷன் யார்?


சீஷன்‌ வேதாகம உபதேசத்தில்‌ நிலைத்திருக்கிறான்‌

யோவான் 8 : 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

சீஷன்‌ சுயவெறுப்பின்‌ பாதையைத்‌
தெரிந்துகொண்டு ஆண்டவரைப்‌ பின்பற்றுகிறான்‌:

லூக்கா 9: 23 பின்பு அவர்‌ எல்லாரையும்‌ நோக்கி: ஒருவன்‌ என்‌ பின்னே வர
விரும்பினால்‌ தன்னைத்‌ தான்‌ வெறுத்து, தன்‌ சிலுவையை அனுதினமும்‌ எடுத்துக்கொண்டு, என்னைப்‌ பின்பற்றக்கடவன்‌.

சீஷன் அவரிடத்தில் கற்றுக்கொள்கிறான்

மத்தேயு 11 : 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

சீஷர்கள் ஒருவரில் ஒருவர் அன்பு கூறுகிறார்கள்

யோவான் 13 : 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

சீஷன்‌ கனி கொடுக்கிறான்‌

நீங்கள்‌ மிகுந்த கனிகளைக்‌ கொடுப்பதினால்‌ என்‌ பிதா மகிமைப்படுவார்‌, எனக்கும்‌ சீஷராயிருப்பீர்கள்‌. யோவான்‌ 15 : 8

Comments

Popular posts from this blog

Promise Word

செப்பனியா 3:17

மனத்தாழ்மை ஆசீர்வாதத்திற்கான ஒரு வழி