சத்தியத்தின் இரகசியம்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:32
இந்த வசனம் எந்த விடுதலை குறித்து பேசுகிறது?
1.ஆத்துமாவின் விடுதல
2.ஆவியின் விடுதலை
3.சரீரத்தின் விடுதலை
சத்தியத்தின் முக்கியத்துவம்:
யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
இயேசு கிறிஸ்து சத்தியம் என்ன என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே பூமிக்கு வந்ததாக இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்.
1 தீமோத்தேயு 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
இந்த வசனத்தில் எல்லா மனிதரும் சத்தியத்தை அறிய வேண்டும் அதுதான் தேவனுடைய சித்தம் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment